(றிஸ்வான் சாலிஹூ)
நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாசா ஆனந்தன் அவர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் சிராஜ் மஷ்ஹூரை அவரது இல்லத்துக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை (08) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது கடந்த 2ம் திகதி நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சுயேச்சைக் குழுவோடு செய்து கொண்ட மக்கள் நலன் சார்ந்த புரிந்துணர்வு ஓப்பந்தம் பற்றியும், எதிர்காலத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் பற்றியும் விரிவாக பேசப்பட்டது.
இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான ஜஹான், யோகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 09, 2020
Rating:
