கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி மாணவன் எம்.எப்.எம்.அம்மார், 128 வருட பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்!!

வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவன் எம்.எப்.எம்.அம்மார் 200 புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் 128 வருட வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 200 புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களில் அம்மாரும் ஒருவராவார். இவருக்கான பாராட்டு நிகழ்வு புதன்கிழமை (18) மிகவும் எளிமையான முறையில் அதிபர் றிஸ்வி மரைக்கார் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.
இதன்போது மாணவனின் திறமையை பாராட்டி பாடசாலையின் ஆளுநர் சபையினால் அதன் செயலாளர் அலவி முக்தாரினால் ஒரு லட்சம் ரூபா சன்மானமும், அதிபரினால் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்கள் வங்கி தலைமையகத்தின் ஏற்பாட்டில் அதன் பிராந்திய முகாமையாளர் என்,கே. விலமலசிறி தலைமையிலான வங்கி அதிகாரிகளினால் ஒரு இலட்சம் ரூபா வைப்புப்பண சன்மானமும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாணவனின் பெற்றோர்களான எம்.ஸே.எம்.பர்ஸான் பாத்திமா றிஸ்மினா தம்பதிகளும், மாணவனின் வகுப்பாசிரியர் நளீமா நசீமும் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Editor
on
November 19, 2020
Rating: