தனியார் வைத்தியத்துறை வரலாற்றில் அக்கரைப்பற்று ஜீனியஸ் வைத்தியசாலையில் மற்றுமொரு சாதனை



(றிஸ்வான் சாலிஹூ)

கிழக்கிலங்கையின் தனியார் வைத்தியத்துறை வரலாற்றில் அக்கரைப்பற்று ஜீனியஸ் வைத்தியசாலையில் மற்றுமொரு கமறா தொழில்நுட்ப முறையில் சத்திர சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

கமரா தொழிநுட்பம் மூலமான கற்பப்பை அகற்றல் சத்திர சிகிச்சையை (Total Laparoscopic Hysterectomy (TLH)) பெண்ணோயியல், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சீ.எம்.முஸ்தாக் அவர்களினால் அக்கரைப்பற்று ஜீனியஸ் வைத்தியசாலையில் புதன்கிழமை (18) மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வழக்கமாக மிக நீளமான கீறலிட்டு செய்யப்படும் சாதாரண முறையிலான கற்பப்பை அகற்றல் சத்திர சிகிச்சையுடன் (Total Abdominal Hysterectomy) ஒப்பிடுகையில் பல அனுகூலங்களைக் கொண்ட மேற்படி சத்திர சிகிச்சை, இந்நவீன மருத்துவ யுகத்தில் மிகப் பிரபலமாகி, நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தனியார் வைத்தியத்துறை வரலாற்றில் அக்கரைப்பற்று ஜீனியஸ் வைத்தியசாலையில் மற்றுமொரு சாதனை தனியார் வைத்தியத்துறை வரலாற்றில் அக்கரைப்பற்று ஜீனியஸ் வைத்தியசாலையில் மற்றுமொரு சாதனை Reviewed by Editor on November 19, 2020 Rating: 5