அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் 14 மாணவர்கள் புலமைப் பரிசில் பெற தகுதி, 184 புள்ளிகளை பெற்று ஒரு மாணவன் சாதனை!!!!



(றிஸ்வான் சாலிஹூ)

இவ்வாண்டு (2020) நடைபெற்ற தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் 14 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று புலமைப் பரிசில் பெறுவதற்கான தகுதிகளை பெற்றுள்ளார்கள் என்று கல்லூரியின் அதிபர் எஸ். றினோஸ்டீன் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பெற தகுதி பெற்றுள்ள மாணவர்களில், முஹம்மட் றிப்கான் றாசீத்கான் என்ற மாணவன் 184 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதோடு, இம்மாணவனின் இச் சாதனைக்கு பாடசாலை வகுப்பாசிரியர் எம்.எல்.எம்.நிசாம் பாராட்டுக்குரியவர் என்பதையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

இப்பாடசாலைக்கு தற்போது கிடைத்திருக்கும் இந்த அடைவு மட்டமானது, கல்லூரியின் எதிர்கால கல்வி எழுச்சிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

இம்மாணவர்களின் இந்த சாதனைக்கு உதவி செய்த கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர், வகுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவிக்கின்றார்கள்.

அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் 14 மாணவர்கள் புலமைப் பரிசில் பெற தகுதி, 184 புள்ளிகளை பெற்று ஒரு மாணவன் சாதனை!!!! அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியில் 14 மாணவர்கள் புலமைப் பரிசில் பெற தகுதி, 184 புள்ளிகளை பெற்று ஒரு மாணவன் சாதனை!!!! Reviewed by Editor on November 16, 2020 Rating: 5