
(பாறுக் ஷிஹான்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று (28) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 31 பேர் அடையாளம் காணப்பட்டமையினை அடுத்து, நேற்று முன்தினம் வியாழக்கிழமை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்த நிலையிலேயே, மேற்படி தனிமைப்படுத்தல் சட்டம், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் தொடர்ந்தம் நீடிக்கும் என மாகாணப் பணிப்பாளர் கூறினார்.
Reviewed by Editor
on
November 28, 2020
Rating: