காத்தான்குடியில் எவருக்கும் தொற்று இல்லை


(எம்.எஸ்.எம் நூர்தீன்)

காத்தான்குடியில் நேற்று (27)  32பேருக்கு எடுத்த PCR பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார அதிகாரிகளின் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோருடன் முதலாவது தொடர்பாளர்களாக காணப்பட்டவர்களுக்கும், பதுறியா வித்தியாலய மாணவிக்கும், சந்தையில் வியாபாரம் செய்யும் சிலருக்கும், கொழும்பிலிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்த சிலருக்குமாக 32 பேருக்கு நேற்றைய தினம் (27) PCR பரிசோதனை இடம் பெற்றது. 

இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் எவருக்கும் தொற்று இல்லை காத்தான்குடியில் எவருக்கும் தொற்று இல்லை Reviewed by Editor on November 28, 2020 Rating: 5