15 உறுப்பினர்களின் ஆதரவுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!!!


(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (12) வியாழக்கிழமை காலை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 15 உறுப்பினர்களின் மேலதிக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எல் அமானுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வுக்கு சமூகமளித்த 16 உறுப்பினர்களில் தேசிய காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.அஜ்மல் மாத்திரம் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார். இருந்த போதிலும், தேசிய காங்கிரஸின் சார்பில் இன்றைய அமர்வில் கலந்து கொண்ட ஏனைய 03 உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.

தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.பீ.பதுருதீன் மற்றும் பொதுஜன பெரமுனயின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வரவு செலவு நிறைவேற்ற வெற்றியானது, கெளரவ தவிசாளர் அவர்களின் எதிர்காலம் அபிவிருத்தி பணிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

15 உறுப்பினர்களின் ஆதரவுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!!! 15 உறுப்பினர்களின் ஆதரவுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!!! Reviewed by Editor on November 12, 2020 Rating: 5