பிள்ளையானின் சகா, பூ.பிரசாந்தன் CIDயினரால் திடீர் கைது!


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினரால் காலை அவர் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த சம்பவம் தொடர்பிலே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிள்ளையானின் சகா, பூ.பிரசாந்தன் CIDயினரால் திடீர் கைது! பிள்ளையானின் சகா, பூ.பிரசாந்தன் CIDயினரால் திடீர் கைது! Reviewed by Editor on November 12, 2020 Rating: 5