
(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கையின் கொரோனா தொற்று இரண்டாவது அலைக்கு பின்னர் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 200 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆகக் கூடுதலாக கோறளைப்பற்று மத்தியில் 60பேரும், அக்கரைப்பற்றில் 51பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி கடந்த வியாழக்கிழமை (26) மாலையிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக சுகாதார பிரிவினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் 200 பேருக்கு கொரோனா!!
Reviewed by Editor
on
November 30, 2020
Rating:
Reviewed by Editor
on
November 30, 2020
Rating: