ஜப்னா ஸ்டெலியன்ஸ் 8 விக்கெட்களினால் வெற்றி



(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக் தொடரின் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி 8 விக்கெட்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்றைய போட்டியில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் மற்றும் கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பங்கேற்றன.

முதலில் துடுப்பாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 8விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றார்கள். இதில் ஆகக்கூடிய ஓட்டங்களாக அணியின் தலைவர் சஷீட் அப்ரிடி 23 பந்துகளுக்கு முகம் கொடுத்து 58ஓட்டங்களை விலாசல் முறையில் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி 19.3 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 2விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை பெற்று இச் சுற்றுத் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியுள்ளார்கள். இதில் அணியின் அதிரடி வீரர் அவிஸ்க பெர்ணான்டோ 63பந்து வீச்சில் 92ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்னா ஸ்டெலியன்ஸ் 8 விக்கெட்களினால் வெற்றி ஜப்னா ஸ்டெலியன்ஸ் 8 விக்கெட்களினால் வெற்றி Reviewed by Editor on November 28, 2020 Rating: 5