
அக்கரைப்பற்றில் கொரோனா என்பதால் எல்லாருமே இந்தப் பக்கம் தலை வைத்துத் தூங்கவும் தயங்கும் காலகட்டம் இது, ஆனால் இங்கே தான் நானும் என் பிள்ளையும் மட்டும்.
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் சிறுவர் நல விடுதிக்கு இரு நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக வந்தோம்.
அக்கரைப்பற்று இல்லை இதை, அக்கறைப்பற்று என்றே சொல்ல வேண்டும்.
அக்கறையுடன் கவனிக்கும்.. அக்கறையான மருத்துவர் குழாமொன்று இங்கே இருக்கிறது...
ஆதாரம் எதுவுமின்றி தனித்திருக்கும் வேளையிலும் ஆதரவு அளித்து எங்களை அல்லும் பகலும் பேணிக் காக்கிறது இந்த ஆதார வைத்தியசாலை தான்.
ஆறாத நோயும் கூட ஆறி விடும் அளவுக்கு ஆளுக்கொரு தடவை என்று அடிக்கடி வந்து ஆறுதல் கூறும் அருமையான வைத்தியர்கள் இங்கே இருக்கின்றார்கள்.
குழந்தை ஒன்றின் சிறு அழுகுரல் கேட்டு விட்டாலும், குழுமியிருக்கும் அங்கு முழு வைத்திய குழாமும் அது மட்டுமல்ல, ஆளில்லா நேரத்தில் அவசரமென்று தாய் அங்கு இங்கு சென்று விட்டால் அங்கு தாய் வரும் வரைக்கும். எங்குமே செல்லாமல்அங்கேயே இருந்து கொண்டு பிள்ளையை அன்னை போல் அரவணைக்கும் அன்பான உள்ளம் கொண்ட தாதியர்கள்..!!
அடிக்கடி விடுதியைச் சுத்தம் செய்வதிலிருந்து காலை ஆகாரம் முதல் இராப்போசனம் வரைக் கொடுத்து.. வீடு போல் கவனித்துக் கொள்ளும்.. திட்டமிடல் முகாமைத்துவம்..!!
இன்னும் எதை எதையோ சொல்லலாம் இங்கு பௌதீக வளத்திலோ,மனித வளத்திலோ, எந்தவிதக் குறைகளும் இல்லை. வந்து சிகிச்சை பெற்றால் ஓடிப்போகும் நோய்களின் தொல்லை..!!
இலவச மருத்துவத்தையும் எல்லாவற்றிற்கும் காரணமான எல்லாம் வல்ல இறைவனையும் எல்லா வேளைகளிலும் புகழ வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்..!!
(பாத்திமா றிப்னா றுமைஸ்)
Reviewed by Editor
on
November 28, 2020
Rating: