(எஸ்.எல்.மன்சூர் - ISA)
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய ஆரம்பக்கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஏ. அபுதாஹிர் அவர்கள் 2020.11.11ஆம் திகதியுடன் பணி நிறைவுற்று பிரியாவிடை பெறுகின்றார்.
ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, உதவிக்கல்விப் பணிப்பாளராக 36 வருடங்கள் சேவையாற்றி அரசபணியிலிருந்து இன்று விடைபெறுகின்றார்.
மனிதவாழ்வின் யதார்த்தம் புரிந்த, கடமையின் உள்ளார்ந்தம் தெரிந்த, எதையும் தாங்கி அனைத்திலும் பங்கெடுப்பதில் உபகாரியனாய். வலயத்தின் ஆரம்பக்கல்வியில் கண்ணாயிருந்து அனைவரையும் வழிநடாத்திய அன்புக்குரிய ஆசானியத் தோழனாய் வழிகாட்டிய அபுதாஹிர் அவர்களது இன்றுடன் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் அபுதாஹிர் தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு..
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
