சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீட்டு வைக்கப்பட்டது!



சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா இன்று (14) சனிக்கிழமை காலை போரத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான கலாநிதி றியாத் ஏ மஜிட் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு இந்த வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிவின் இணைப்பாளர் எம்.இன்சாட் உட்பட சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீட்டு வைக்கப்பட்டது! சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீட்டு வைக்கப்பட்டது! Reviewed by Editor on November 14, 2020 Rating: 5