மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது!!!


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (11) புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும, மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்து தனது கடமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மாவட்ட இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மா.மங்களேஸ்வரி சங்கர் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஸ்ரீகாந்த் நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மாவட்ட பொறியியலாளர் ரி.சுமன் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது!!! மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது!!! Reviewed by Editor on November 11, 2020 Rating: 5