
தம்பிலுவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பில் பணியாற்றி வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீணாக எவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், தேவையுடைய வர்கள் வெளியேறும் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றார்கள்.
தம்பிலுவில் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
Reviewed by Editor
on
November 11, 2020
Rating: