பிரதம மந்திரி அம்பாறை தீகவாபி விகாரைக்கு விஜயம்...


(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கை திருநாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க அம்பாரை தீகவாபி ரஜமகாவிகாரைக்கு பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸ இன்று (11) புதன்கிழமை காலை விஜயம் செய்துள்ளார்.

இங்கு சில அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வகையிலே அவர் விஜயம் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உயர் அதிகாரிகள் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதம மந்திரி அம்பாறை தீகவாபி விகாரைக்கு விஜயம்... பிரதம மந்திரி அம்பாறை தீகவாபி விகாரைக்கு விஜயம்... Reviewed by Editor on November 11, 2020 Rating: 5