அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பினார்.



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று (18)  நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் நடிகை குஷ்பு அதிஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பியுள்ளார்.

விபத்து குறித்து குஷ்பு கூறுகையில்,

கண்டெய்னர் லொறி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பினார். அதிர்ஷ்டவசமாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பினார். Reviewed by Editor on November 18, 2020 Rating: 5