பாரிய தீ விபத்து, குவைத்தில் சம்பவம்



(றிஸ்வான் சாலிஹூ)

குவைத் நாட்டின் சுவைத் எனும் வனிக நிறுவனங்கள் அடங்கிய பகுதியில் "சூக் மீரா" எனும் பிரபலமான வர்த்தக நிறுவன வாளாகத்தில் இன்று (18) புதன்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகளவிலான தீயனைப்பு படை வீரர்கள் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் நபர் ஒருவர் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தினுள் இருந்ததாக வெளியான தகவலை அடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குவைத் நாட்டின் தீயனைப்பு படை தலைவர் காலீத் ரஃக்ஹான் அல்-முஷிரத் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரிய தீ விபத்து, குவைத்தில் சம்பவம் பாரிய தீ விபத்து, குவைத்தில் சம்பவம் Reviewed by Editor on November 18, 2020 Rating: 5