
(ஒலுவில்.எம்.ஜே.எம் பாரிஸ்)
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம், 2 வருடங்களில் 5 லட்சம் கோடியில் நாட்டின் கடன்சுமையை அதிகரிக்கச் செய்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான 2ம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போது தெரிவித்ததாவது:-
வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லட்சத்தி 96 ஆயிரத்தி 100 கோடி வரவாகவும், 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவீனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அரசாங்கம் 2 லட்சம் கோடியை கடனாகப் பெற்றுவிட்டது.
2014ம் ஆண்டில் 14 லட்சம் கோடியாக கடன் இருந்ததாக அரசாங்கமே கூறியது. இப்போது இரண்டே வருடங்களில் 5 லட்சம் கோடிகளில் கடன் சுமையை அரசாங்கம் அதிகரிக்கச் செய்துவிட்டது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்காக 5 லட்சம் கோடி ரூபாயை கடனான பெற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதனால் மேலும் அரசாங்கம் நாட்டின் கடனை அதிகரிக்கச் செய்கிறது. அப்படியென்றால் 18 லட்சம் கோடி கடன் சுமை அதிகரிக்கும். மேலும் மக்களின் கழுத்துப்பட்டி இறுகும். மாறாக நாட்டில் மேலும் புது நோட்டுக்களை அச்சிடவும் அரசாங்கம் முயற்சிக்கும். இதைத்தான் நாங்கள் அரசாங்கம் தோற்றுவிட்டது என்று கூறுகின்றோம்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்யமாட்டோம் என்று அரசாங்கம் கூறி ஆட்சிக்கு வந்தது. 3வது வாரத்திலேயே கொழும்பிலுள்ள சங்கிரிலா ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள பகுதியை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துவிட்டது.
போதாக்குறைக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையும் அரசாங்கம் இந்தியாவுக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக ஒன்றும் இல்லை. பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிக்கே வழிகோலுகின்றது. ரணில் - மைத்திரி அரசாங்கம் நாட்டைக் கடன் சுமைக்குள் தள்ளிவிட்டதாக கூறி ஆட்சிப் பீடமேறிய அரசாங்கம் இன்று அதனையே செய்துவருகின்றது.
ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரச சொத்துக்களை விற்பனை செய்துவருவதாகவும், அதனை தடுப்பதாகவும் தாங்களும் அதனை செய்யமாட்டோம் என்றுதான் கூறினார்கள். இன்று அதனை மறந்து தலைகீழாக ஆட்சியைப் புரிகின்றார்கள் என்றார்.
Reviewed by Editor
on
November 19, 2020
Rating: