அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்



(றிஸ்வான் சாலிஹூ)

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளில் மேல் மாகாண தொழில்நுட்ப கல்லூரிகள் தவிர்த்த ஏனைய அனைத்து கல்லூரிகளினது கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 25.11.2020 ஆம் திகதி (புதன் கிழமை) மீளவும் திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் என்று தொழில்நுட்பக்கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளும் குறித்த திகதியில் ஆரம்பிக்கப்படும் என அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எம்.சோமசூரியம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கல்லூரிக்கு வருமாறும் கேட்டுக் கொள்வதோடு, பின்வரும் நடைமுறைகளை பேணிக் கொள்ளுமாறும் அதிபர் மாணவர்களை கேட்டுக் கொள்கின்றார்.

அதனடிப்படையில்,

1. முக கவசம் அணிதல்.

2. கைகளை கழுவுதல்.

3. சமூக இடைவெளியை பேணுதல்.

4. தமக்குரிய மதிய போசனங்களை தாமே வீட்டிலிருந்து கொண்டுவருதல், போன்ற விடயங்களாகும்.


அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் Reviewed by Editor on November 24, 2020 Rating: 5