தொழில்நுட்ப கல்லூரி வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

 



(றிஸ்வான் சாலிஹூ)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் எண்ணத்தில் உருவான  ஒரு இலட்சம்  கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி வீதியினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


தேசிய காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ எல்.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வீதி வேலைத்திட்டம் 05 கிலோ மீற்றர் தூரம் வரைக்கும் காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று மேலதிக மாகாண பணிப்பாளர் ஐ.எல்.அமீனுல் பாரி, மற்றும் பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார் நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், பொறியியலாளர் ஏ.எல்.எம். சபீக் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதோடு, இந்த வீதி அபிவிருத்தி திட்ட ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




தொழில்நுட்ப கல்லூரி வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது தொழில்நுட்ப கல்லூரி வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது Reviewed by Editor on November 22, 2020 Rating: 5