அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் உதவியுடன் முகத்துவாரம் வெட்டப்பட்டது- விவசாயிகள் மகிழ்ச்சியில்...!!
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாய மற்றும் தாழ் நிலங்களில் மழை நீர் தேக்கி நிற்பதால் அது பயிர்ச் செய்கைக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற காரணத்தால் இப்பிரதேச விவசாயிகளின் கோரிக்கைகளுக்கமைய இன்று (18) புதன்கிழமை காலை 6.00மணி முதல் அக்கரைப்பற்று முகத்துவாரம் வெட்டப்பட்டது.
அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்கள உயரதிகாரி மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோர்கள் கலந்தாலோசித்து எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கவைவாக, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் அவர்களின் உதவியுடன் இன்று காலை முகத்துவாரம் வெட்டப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முதலாவது வருட பதவியேற்பு நிறைவு நாள் மற்றும் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினமான இன்று இந்த வேலைத்திட்டம் செய்யப்பட்டதோடு, இந்த வேலைத்திட்டம் சிறப்பாக செய்யப்பட்டமைக்கு சகல வழிகளிலும் உதவிய பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர்களுக்கு விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.
Reviewed by Editor
on
November 18, 2020
Rating:


