காபட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!!!



(றிஸ்வான் சாலிஹூ)

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்களின் 100000 கிலோ மீட்டர் வீதி வேலைத் திட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் பின்வரும் வீதிகள் உள்வாங்கப்பட்டு அதன் ஆரம்பகட்ட  வேலைகள் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை காலை இறக்காமம் ஆலயடிச்சந்தியில், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஜே.கலீலூர் றஹுமான் (தாஹிர்) தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குளத்தாவளி வீதி, ஓட்டுத்தொழிற்சாலை வீதி, தேசிய பாடசாலை வீதி,                             இலுக்குச்சேனை வீதி,ஜபல் நகர் பிரதான வீதி, அரபா நகர் வீதி, வரிப்பத்தான்சேனை மையவாடி வீதி, வரிப்பத்தான்சேனை  வட்டிச்சேனை வீதி ஆகிய வீதிகள் இத்திரைப்படத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியிலாளர் எம்.பீ.அலியார், இறக்காமம் உதவிப்பிரதேச செயலாளர் நஹீஜா முஷப்பிர், இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல். நௌபர் (மௌலவி), பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம். ஆஷிக், எஸ்.ஏ.அன்வர், எம்.எல்.முஸ்மி, சட்டத்தரணி எஸ்.எல்.பாறூக், தேசிய காங்கிரஸின் பொதுத் தேர்தல் வேட்பாளர் கே.எல்.சமீம் மற்றும் இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் , அதிபர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்ததோடு, வேலைத்திட்ட ஞாபகார்த்தமாக இறக்காமம் மைய்யவாடிக்கு முன்னால் மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


காபட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!!! காபட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!!! Reviewed by Editor on November 22, 2020 Rating: 5