
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்கள் நேற்று (26) மாலை 6.00மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று நகர வர்த்தக் நிலையங்கள், சந்தைகள், அரச காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு சன நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சேடிக் காணப்படுகின்றது.
நேற்று அக்கரைப்பற்று பொதுச் சந்தைப் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்ட 31 கொரோனா தொற்றாளர்கள் பாலமுனை மற்றும் பதியத்தலாவ கொரோனா நோய் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
November 27, 2020
Rating: