எரித்தலின் பரிணாமம்!!!



இப்றாஹிம் நபியின் வாரிசுகள்
இறந்தாலும் எரிப்பதே நியாயம்
இப்படி ஒரு கோட்பாட்டை
இறந்த பிர்அவ்ன் சொல்லி விட்டானோ
இவர்களின் கனவுகளில்....


நெருப்புக்கும் முஸ்லிங்களுக்கும்
நெருங்கிய தொடர்பை உண்டாக்க
நெடுநாள் தீட்டிய திட்டங்களோ இன்று
நெஞ்சுகளில் குத்தப்படுகிறது....


விளைந்த வயல்நிலங்களில் தொடங்கி

கடைகளிலும் சொத்துக்களிலும் பரவி

உயிரோடும் எரித்தது போதாதென்று

இறந்த பின்னும் எரிக்கத்துடிக்கும் வக்கிரம்

இந்த மானிடப்பிறவியில் மட்டும்தானே காண்கின்றோம்...


முஸ்லிமுக்கு கொரோணா என்றால்

மூச்சிரைக்குமளவு சந்தோசம்

முஸ்லிம் இறந்துவிட்டால்

கொரோணாவாக இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை

இறந்த உடலில் கொரோணா இருந்தால்

எரியப்போகிறதே என்ற ஆனந்தம்

எரிக்கும் புகை கண்டாலே

உச்சம் தொட்ட போதையின் ஆர்ப்பரிப்பு...


நீங்கள் மனிதப்பிறவிகள் தானா

என்ற கேள்வியை கேட்கும் இடத்தில் கூட

நீங்கள் இல்லாததே எமது வருத்தம்...


மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்

நீங்கள் எரிப்பது எங்கள் ஆன்மாக்களை அல்ல

வெறும் உடல்களைத்தான் 

ஆனாலும் எங்களுக்கு அவை புனிதமானவை...


அநியாயக்காரர்கள் நரகில் இறக்கமாட்டார்கள்

அங்கே அவர்கள் உயிரோடு எரிக்கப்படுவார்கள்

தோல் எரிந்து கருகிய பின்னே மீண்டும்

புதுத்தோல் அணிவிக்கப்பட்டு எரிக்கப்படுவார்கள்

இதுதான் தொடரவிருக்கும் இறை தண்டனை...


உங்களின் எரித்தலில் எமக்கு

இம்மியளவும் சம்மதமில்லை

உங்களின் எரித்தலில் எமக்கு

பங்களிப்புச் செய்ய மனமுமில்லை

ஆகையால் உங்களின் சரியெல்லாம்

எமக்கு சரியாயுமில்லை

இப்போதும்

உங்களுக்கு உங்கள் மார்க்கம்

எங்களுக்கு எங்கள் மார்க்கம்!


(டாக்டர். அப்துல் ரஷாக்)

எரித்தலின் பரிணாமம்!!! எரித்தலின் பரிணாமம்!!! Reviewed by Editor on November 29, 2020 Rating: 5