மேல் மாகாணத்திலிருந்து வெளியேறத் தடை


இன்று (11) புதன்கிழமை இரவு 10மணியிலிருந்து எதிர்வரும் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மேல் மாகாணத்திலிருந்து எவரும் வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு எந்தவொரு வாகனங்களும் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) வரை உள்வரவோ மற்றும் வெளியேறவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறத் தடை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறத் தடை Reviewed by Editor on November 11, 2020 Rating: 5