இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிதுறை அமைச்சின் ஆழ்கடல் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து அமைச்சின் வேண்டுகோளின் பேரில், பல ஆண்டுகளாக சிதைந்திருந்த பல பேருந்துகள் ஒரு கப்பலைப் பயன்படுத்தி திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
திருகோணமலை கடலில் கடல்வாழ் உயிரினங்களுக்கு, மீன்களுக்கு நீருக்கடியில் ஒரு ( underwater reef ) உருவாக்கவே இவ்வாறு பழைய பேருந்துகள் பயன் படுத்தப்பட்டுள்ளன மேலும் இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடு என இது தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது.
பாவனைக்கு உதவாத பேருந்துகள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன!!!
Reviewed by Editor
on
November 14, 2020
Rating:
Reviewed by Editor
on
November 14, 2020
Rating:

