
இன்று (14) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. 12/11/2020 அன்று எமதூரில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதைனை முடிவுகள் எவருக்கும் தொற்று இல்லை என்று வந்தபோதிலும் எமது ஊரில் கொரேனா பரவும் அச்சுருத்தல் தொடர்ச்சியாக காணப்படுவதனாலும் பொதுமக்கள் அதி அத்தியவசிய தேவை தவிர்ந்த வேறு எக்காரணத்தைக் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எப்பொழுதும் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து கைகளை அடிக்கடி கழுவுவதுடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் அதிக அக்கறை எடுக்குமாறும் வேண்டிக்கொள்ப்படுகின்றனர்.
2. பள்ளிவாயல்களுக்கு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக பேணப்படுவதோடு பள்ளிவாயல்களை மீளத் திறப்பது தொடர்பில் நிர்வாகிகளுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும்.
3. தள வைத்தியசாலை நடவடிக்கைகள் ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் இடம்பெறுவதால் பொதுமக்கள் வழமைபோன்று அச்சமின்றி தங்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்ளவும்.
4. பாமசி தவிர்ந்த உணவகங்கள் உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மறு அறிவித்தல் வரை இரவு 9 மணியுடன் கட்டாயம் மூடப்படுவதோடு தவறும் வர்த்தகநிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
5. ஆட்டோ சாரதிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றுவதோடு, தவறும் சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்து பொலீஸாரினால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை முற்றாக தவிர்த்துக் கொள்வதோடு மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து வருகை தருபவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
எனவே மேற்படி அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் நடந்து தங்களையும் தங்கள் ஊரையும் பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
Reviewed by Editor
on
November 14, 2020
Rating: