
(றிஸ்வான் சாலிஹூ)
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு மற்றும் முதலாவது போட்டி அனைத்தும் நாளை (26) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நாளை (26) வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கும், முதலாவது போட்டி கொலம்போ கின்க்ஸ் மற்றும் கென்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் மாலை 7.30மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாளை முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டித் தொடரில் கொலம்போ கின்க்ஸ், கோல் க்லெட்யேடர்ஸ், ஜப்னா ஸ்டெலியொன்ஸ், தம்புள்ளை வைகின்ஸ், கென்டி டஸ்கர்ஸ் ஆகிய 05 அணிகள் கலந்து கொள்ளவுள்ளதோடு, அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
November 25, 2020
Rating: