கொழும்பில் 100 கொவிட் மரணங்கள்!!!

                  

கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் கொவிட்-19 தரவு தளத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.
நேற்று முன்தினம் (02) வரையில் கொவிட்-19 தொற்றினால் கொழும்பு மாவட்டத்தில் 95 பேர் உயிரிழந்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகத்தின் கொவிட்-19 தரவு தளத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (03) கொழும்பு மாவட்டத்தில் 5 மரணங்கள் பதிவாகியதை அடுத்து, கொவிட் நோயினால் கொழும்பு மாவட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் (02) வரையில் கொவிட்-19 தொற்றினால், பீடிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், தொடர்ந்து சிகிச்சைப்பெறுபவர்கள் தொடர்பான மாவட்ட ரீதியான முழுமையான விபரம் இந்த வரைபடத்தில்....



(Bharathi Raja - Journalist)


கொழும்பில் 100 கொவிட் மரணங்கள்!!! கொழும்பில் 100 கொவிட் மரணங்கள்!!! Reviewed by Editor on December 04, 2020 Rating: 5