(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்றில் 17ஆவது நாளாகவும் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அக்கரைப்பற்றின் பிரதான மற்றும் உள்வீதிகளில் மக்கள் எவரும் வராமல் சுகாதார மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்கி அக்கரைப்பற்று மாநகரத்தை கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அக்கரைப்பற்று மாநகர சபை, பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், சமூக சேவை அமைப்புக்கள் ஆகிய அனைவரும் ஒன்றினைந்து அக்கரைப்பற்று மாநகரம் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு இரவு பகலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அக்கரைப்பற்றில் நவம்பர் மாதம் 26ஆம் திகதி மாலை 6.00மணிக்கு இந்த தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
