இறக்காம பிரதேச இலக்கிய விழா - 2020



(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கை கலாசார திணைக்களத்தினால் வருடாந்தம் நடைபெறும் பிரதேச மட்ட இலக்கிய விழா -2020, இறக்காமம் பிரதேச இலக்கிய விழா இறக்காமம் கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில்  இன்று சனிக் கிழமை (26) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளரும், இறக்காமம் கலாசார அதிகார சபையின் தலைவருமான     அல்- ஹாஜ் எம்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றறது.

இவ் இலக்கிய விழாவை  முன்னிட்டு "கலை அருவி" சிறப்பு மலர் வெளியீடு செய்துவைக்கப்பட்டதோடு, பிரதேச செயலக  மட்டத்தில் இடம்பெற்ற இலக்கியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சாண்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.


கொரோனா அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அழைக்கப்பட்டு மிக சிறிய அளவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி திருமதி நஹீஜா முஸப்பிர், பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஸியா அர்ஷாட், மாவாட்ட கலாசார உத்தியோகத்தர் திரு ஏ. றிம்ஸான், இறக்காமம் கலாசார அதிகார சபையின் உப தலைவர் எஸ்.எல். நிஸார் (AD) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இறக்காம பிரதேச இலக்கிய விழா - 2020 இறக்காம பிரதேச இலக்கிய விழா - 2020 Reviewed by Editor on December 26, 2020 Rating: 5