
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் நான்காவது நபர் இன்று (24) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் கொரோனாவால் 4ஆவது மரணம்
Reviewed by Editor
on
December 24, 2020
Rating:
