Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்?


Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்?

1) COVID-19 சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்.
இவ்வாறானவர்களுக்கு Antigen Testற்குரிய Sample டன் PCR Test ற்குரிய Sample ம் சேர்த்து ஒரே தடவையில் எடுக்கப்படும்;
Antigen Test,
• Positive ஆகுமிடத்து PCRற்குரிய Sample முறையாக அகற்றப்படும். (Discard)
• Negative ஆகுமிடத்து PCRற்குரிய Sample மூலம் PCR செய்யப்பட்டு COVID-19 இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2) COVID-19 அறிகுறிகளற்ற, ஆனால் COVID-19 நோயாளிகளுடன் நெருக்கமானவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள்.

3) COVID-19 அறிகுறிகளற்ற, ஆனால் COVID-19 பரவுகை அவதானிக்கப்படுகின்ற பிரதேசமொன்றில் இருந்து ஏதாவதொரு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்.

4) COVID-19 நோயாளிகளுடன் தொடர்பு பட்டதாக (Exposure) சந்தேகிக்கப்படும் சுகாதாரத் துறை ஊழியர்கள்.

5) COVID-19 சந்தேகத்திற்கிடமான மரணங்கள்.

இச்சந்தர்ப்பத்திலும் செய்யப்படும் Antigen Test, Negative ஆகுமிடத்து; PCR செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

6) இன்புளுவென்சா போன்ற நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலை OPDக்கு வரும் நோயாளிகள்.

முக்கிய குறிப்புகள் சில...
# பரிசோதனைகளுக்கான Sampleகள் எடுக்கப்படும் உடற்பகுதி.

• Antigen Test - ஒரு பக்க மூக்குத்துவாரத்தினூடாக மூக்குத் தொண்டைப் பகுதி (Nasopharynx)

• PCR - மறு பக்க மூக்குத்துவாரத்தினூடாக மூக்குத் தொண்டைப் பகுதியும் அத்துடன் வாயினூடாக தொண்டைப் பகுதியும் (Throat) என இணைந்த (Combined) இரண்டு Sampleகள்.

# Antigen Test பெறுபேறுகள் விரைவாகப் பெறப்படும் (15-30 நமிடங்கள்) ஆனால் PCR பெறுபேறுகள் தாமதமாகும் (12-24 மணித்தியாலங்கள் அல்லது அதற்கும் மேல்)

# Antigen Test, Positive ஆகுமிடத்து PCRம் Positive ஆகவே இருக்கும் ஆனால், Antigen Test, Negative ஆகுமிடத்து PCR பெரும்பாலும் Negative ஆகவே இருக்குமே தவிர, Positive ஆவதற்குரிய சாத்தியமும் குறிப்பிட்டதொரு சதவீதத்தில் உள்ளது.


Dr. Thameem MusthafaAnaesthetistBase Hospital
Akkaraipattu.

Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்? Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்? Reviewed by Editor on December 03, 2020 Rating: 5