மாணிக்கவாசகர் தயாபரன் மாநகர ஆணையாளராக நியமனம்



(றிஸ்வான் சாலிஹூ)

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர் மட்டக்களப்பு மற்றும் வெருகல் உள்ளிட்ட பல பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, நிர்வாகத்துறையில் பல வருட அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

மாணிக்கவாசகர் தயாபரன் மாநகர ஆணையாளராக நியமனம் மாணிக்கவாசகர் தயாபரன் மாநகர ஆணையாளராக நியமனம் Reviewed by Editor on December 03, 2020 Rating: 5