காத்தான்குடி பொதுமக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட அறிவித்தல்!!!!

 



(எம்.எஸ்.எம்.நூர்தீன்)


காத்தான்குடி பிரதேச செயலகம், நகர சபை, பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ,ரானுவ அதிகாரி , இணைந்து அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய பொது மக்கள் சூறாவளியிலிருந்து தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக கீழ்வரும் விடயங்களால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

சூறாவளி அனர்த்தம் காரணமாக பாதிப்பு ஏற்படுமிடத்து பொதுமக்கள் அருகாமையிலுள்ள பாதுகாப்பான பாடசாலைகளுக்கு தங்களது கிராம உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களுக்கமைவாக , இடம்பெயர்ந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்கும் போது தங்களது கிராம உத்தியோகத்தர்களுடாக அருகாமையிலுள்ள பள்ளிவாயல்களுக்கு ,இடம்பெயருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அனர்த்த முன்னாயத்த ஏற்பாடுகளாக தங்களது வீடுகளிலிருக்கும் உடையக்கூடிய பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்குமாறும், நோய்வாய்ப்பட்டுள்ள நபர்களை பாதுகாப்பான ,இடங்களுக்கு கொண்டுசெல்லும்படியும், அவசர வைத்திய உதவிகள் தேவைப்படுமிடத்து 1990 எனும் ,இலக்கத்துக்கு அழைக்குமாறும், காற்றினால் சேதப்படுத்தப்படக்கூடிய மரங்கள் மற்றும் கட்டடிடங்கள் ,இருப்பின் குறித்த ,இடத்திலிருந்து விலகியிருக்குமாறும், அவசர சேவைகளுக்கு உதவியாக வீதியோரங்களில் எவ்வித வாகனங்களையும் நிறுத்தி வைக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அனர்த்தம் நீங்கியது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வரும்வரை வீடுகளிலிலருந்து வெளியேறாது பாதுகாப்பாக தரித்திருக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, அவசர உதவிகளுக்காக 065 2051991 எனும் பிரதேச செயலக இலக்கத்திற்கு அல்லது நகர சபையின் 065 4929181, 065 2245925 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

பொதுமக்கள் குறித்த அனர்த்தம் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அரச அறிவித்தல்கள் அன்றி வீணான வதந்திகளையும் பொய்ப்பிரச்சாரங்களையும் நம்ப வேண்டாம் எனவும், எல்லா அரச துறையினரும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர் என்பதையும் அறியத்தருகிறோம்.


பிரதேச செயலாளர்

பிரதேச செயலகம்

காத்தான்குடி.

காத்தான்குடி பொதுமக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட அறிவித்தல்!!!! காத்தான்குடி பொதுமக்களுக்கு, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட அறிவித்தல்!!!! Reviewed by Editor on December 02, 2020 Rating: 5