(ஜெமீல் கல்குடா)
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த விடயத்தில் முறையான நீதி விசாரணை வேண்டும் என நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NATIONAL WOMENS FRONT) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநிலத் தலைவி பாத்திமா ஆலிமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுங்குன்றம், ஆணை பாக்கத்தில் குறவர் இன ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.பெண்கள் கடத்தப்படுவதும் , பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ள இந்த சூழலில் இவர்களுடைய மரணம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அவர்கள் உயிரிழப்புக்குரிய உண்மை காரணங்களை கண்டறிந்து குற்றம் நிகழ்ந்திருப்பின் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதுடன் கடும் தண்டனை வழங்கவும், பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
மாணவிகள் மர்மமாக உயிரிழப்பு, நீதி விசாரணை வேண்டும்!
Reviewed by Editor
on
December 26, 2020
Rating:
