(த. தர்மேந்திரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸவின் மக்கள் நலன்புரி வேலை திட்டத்தின் கீழ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்ற ஆயுர்வேத பானத்துக்கான மூலிகை பொதிகள் அம்பாறை மாவட்டம் முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைய காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எம். சி. எம். காலித் வேண்டி கொண்டதன் பேரில் மருந்தகத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு வழங்கி வைப்பதற்காக ஒரு தொகை மூலிகை பொதிகள் இவரிடம் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
திலக் ராஜபக்ஸ எம்.பியின் மக்கள் நலன்புரி வேலை திட்டங்களுக்கான செயலணியை பிரதிநிதித்துவம் செய்து நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பி. ரி. தர்மலிங்கம், ஊடகவியலாளர் த. தர்மேந்திரா ஆகியோர் இவற்றை வைத்திய கலாநிதி காலித்திடம் கையளித்தார். இதன்போது மருந்தகத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள், ஊடக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் மூலிகை பொதிகள் கொடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலுவலகத்தால் மூலிகை பொதிகள் திலக் ராஜபக்ஸ எம்.பிக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலிகை பொதிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது
Reviewed by Editor
on
December 26, 2020
Rating:
