14 வயது பேஸ்புக் காதலியை இரகசியமாக அழைத்து வந்து மரத்தில் பரண் அமைத்து குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுகம்வெரவில் இந்த சம்பவம் நடந்தது.
14 வயதான பாடாலை மாணவியுடன் பேஸ்புக்கில் காதல் வசப்பட்ட 24 வயதான இளைஞன், கடந்த 8
ஆம் திகதி மாணவியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார்.
அருகிலுள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் காத்திருந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக் கொண்டு
அம்பலாந்தோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார்.
காதலியுடன் தங்குவதற்காக அங்குள்ள தோட்டமொன்றில் நின்ற மரத்தில் பரண் அமைத்திருந்தார்.
2
நாட்கள் இருவரும் பரணில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தொலைபேசி தரவுகளின்
அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் (10) பரணியில் இருந்த
ஜோடியை கீழே இறக்கி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ஒன்றரை வருடங்காக தாம் பேஸ்புக்கில்
உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறியுள்ளனர்.
இளைஞன் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24ஆம் திகதி
வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியை நீதித்துறை மருத்துவ
அதிகாரி முன் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் காதலியுடன் பரண் அமைத்து உல்லாசம்!! இளைஞன் கைது!!!
Reviewed by Sifnas Hamy
on
December 12, 2020
Rating:
