கொரோனவும் தொற்றா நோய்களும்.

 



இலங்கையில் Covid -19 தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 31000யை தாண்டியுள்ளது. இந்த  covid 19 தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆகும்.(Update 11 Dec 2020 8.15 pm ). 

இன்றைய நிலையில் இலங்கையில் இந்த corona தாக்கத்தினால் ஏற்பட்ட மரண வீதம் 0.46%.  அதாவது 99.54% கொரோனா தொற்றாளர்கள் முற்றாக குணமடைகிறார்கள். உலகளாவிய ரீதியில் , இலங்கையில் கூட கொரோனா நோயை குணப்படுத்த கூடிய எந்த ஒரு மருந்தும் இன்று வரை கண்டுபிடிக்கப்பட வில்லை. 

அப்படி என்றால்  இலங்கையில்  99.54% % மானவர்கள் எவ்வாறு குணமடைகின்றார்கள்? கொரோனா தொற்றுக்கு உள்ளன நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு , கைகளை அடிக்கடி கழுவுதல், போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்தல், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க  செய்யும்  உணவுகளை  உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல்  போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த வேளையில்  உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தியும் கோவிட் 19 வைரசுக்கு எதிரான antibodies ( நோய் எதிர்ப்புசக்தி) யை உருவாக்கி கொள்ளுவதால் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் குணமடைகிறார்.

அப்படியானால் ஏன் மற்றவர்கள் மரணமடைகின்றார்கள்? 

இந்த மரணமடைந்த 146 நபர்களின் கொரோனா தொற்றுக்கு முன்னரான நோய் நிலைமைகளை ( pre morbid conditions) பார்போமையானால், அதிகமானோர் ( 96 %)  நாட்பட்ட தொற்றா நோய் உடையவர்களாக இருந்துள்ளார்கள் ( Chronic Non Communicable Diseases).  

உதாரணமாக , சீனி நோய் , பிரஸர், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள் , ஈரல் நோய்கள், புற்றுநோய்கள் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். இந்த நோய்கள் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்கள் மரணிப்பர்கள் என்பதல்ல , மாறாக இவ்வாறான நோய்கள் உள்ளவர்கள் தங்களது தொற்றா நோய்கள்  பற்றி கவனம் எடுக்காது, உரிய மருந்துகளை பாவித்து நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அது தனது வீரியத்தின் மூலம்  நீமோனியா , ஏனைய அவயவங்களின் செயற்பாடுகளையும் பாதித்து மரணத்தை ஏற்படுத்தலாம்.

சிக்கல் இல்லாத இருதய நோயாளர்கள் ( stable heart disease) உள்ள சில நபர்கள் , தனிமை படுத்தலில்  அல்லது சிகிச்சை  நிலையங்களில் உள்ளபோது சடுதியாக மரணித்த சில செய்திகளை அண்மைக்காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதே என்ற பயத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தம், அதிக குருதி அமுக்கம், ஹார்மோன் மாற்றம் ( catacholamine surge) என்பவற்றில் ஏற்பட்ட சடுதியான மாரடைப்பு ஆகும்.   

இவற்றை தவிர பூரண சுகதேகியாவர்களுக்கும் கூட கொரோனா தொற்றினால் மரணம்  ஏற்படலாம். இது எவ்வாறு என்று சொன்னால், covid virus க்கு எதிராக நமது உடம்பில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியில் உள்ள இரசாயன பதார்தங்களின் சிக்கல்கள் காரணமாக உடம்பிலுள்ள இரத்த குழாய்களில் அசாதாரான குருதி உறைதல் ஏற்படும். இந்த குருதி உறைதல் பொதுவாக நுரை ஈரலில் உள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படுகின்றது.

 இந்த நிலைமை சில மருந்துகள் மூலமும், செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில வேளை இந்த இரத்த ஊரைதல் அதிகமாக இருந்தால் சிகிச்சை பலனளிக்காது. 

ஆகவே இங்கு அதிகமான covid மரணங்கள்  தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத போதே நிகழ்ந்துள்ளது.

ஆகவே இந்த covid தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் எனில்  சுகாதார பழக்க வழக்கங்களை பேணி நடப்பதோடு, தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


Dr. எஸ்.அஹமட் பரீட் (MBBS, MD)
உடற்கூற்று வைத்திய நிபுணர்
ஆதார வைத்திசாலை
அக்கரைப்பற்று.


 


கொரோனவும் தொற்றா நோய்களும். கொரோனவும்  தொற்றா நோய்களும். Reviewed by Editor on December 12, 2020 Rating: 5