
(றிஸ்வான் சாலிஹூ, முஹம்மட் வாஜீத்)
கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களது 'ஜனாஸா'க்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (21) திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் கௌரவ தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.
தவிசாளரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கண்டத் தீர்மானத்தை தொடர்ந்து கபன்துணி போராட்டமும் இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.
இந் கண்டனப் போராட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உபதவிசாளர், எதிர்க் கட்சித் தலைவர், கெளரவ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Reviewed by Editor
on
December 21, 2020
Rating:
