கல்முனை பிரதேச செயலக காரியாலய செயற்பாடுகள் இன்று மட்டுமே வரையறை...



(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக காரியாலய செயற்பாடுகள் இன்றைய தினம் (16) மாத்திரம் வரையரை செய்யப்பட்டு சேவைகள் நடைபெறுகின்றது. வழமைபோன்று நாளைய தினம் (17) பொதுமக்கள் சேவைகள் நடைபெறும் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சில சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் கல்முனை பிரதேச செயலகம் எதிர்வரும் திங்கள் வரை முடக்கப்படும் என்றும் அங்குள்ள ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கின்ற செய்திற்கு விளக்கம் அளிக்கும் போதே பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் நாளைய தினம் வழமையான செயற்பாடுகள் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றேன் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
கல்முனை பிரதேச செயலக காரியாலய செயற்பாடுகள் இன்று மட்டுமே வரையறை... கல்முனை பிரதேச செயலக காரியாலய செயற்பாடுகள் இன்று மட்டுமே வரையறை... Reviewed by Editor on December 16, 2020 Rating: 5