கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடாத்த திட்டமிடும்போது Covid - 19 பரவுவதை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு அவை அனைத்தையும் உறுதி செய்து உங்களது பகுதிக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் பார்வையிட்ட பின்னர் சுகாதார வைத்திய அதிகாரியினால் அனுமதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னி பொது மக்களை கேட்டுள்ளார்.
இதில் ஏதாவது நிபந்தனைகள் மீறப்படும் ஆயின் திருமண வைபவம் இடைநிறுத்தப்படுவதோடு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி எமது காரியாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோள்...
Reviewed by Editor
on
December 16, 2020
Rating:
