
அன்றாடம் கிடைக்கப் பெறும் கொரோனா பரிசோதனை முடிவுகள் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அப்படி இருக்குமானால் அன்றாடம் கொத்து கொத்தான மரணங்கள் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது போகலாம். இதுதான் இன்று பொருளாதாரத்தில் உச்சம் தொட்ட , மிகச்சிறந்த வைத்திய வசதிகள் உள்ள மேலைத் தேசநாடுகளின் நிலை.
இப்பதிவு உங்களைப் பயம் காட்ட இடவில்லை, இந்த கண்ணுக்குத் தெரியா வைரஸுடனான யுத்தத்தில் உங்கள் யாவரினதும் பங்களிப்புதான் வெற்றிக்கு ஒரே வழி.
1. சரியான திட்டமிட்டு மேலும் பரவாமல் தடுத்தல் தான் முதல்பணி. இது முக்கியமானதும் அவசரமானதுமாகும்.
இதனை தனியே MOH, PHI மற்றும் ஏனைய சுகாதார அதிகாரிகளால் மாத்திரம் பூரணமாக நிறைவேற்ற முடியாது, ஏனெனில் அவர்களிடம் போதிய ஆளணியும் , வளங்களும் இல்லை.
இப்பாரிய பணிக்கு சமூகத்தின் சகல பங்குதாரர்களின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது மனித இனத்தைப் பாதுகாக்க.
மதிப்புக்குரிய Retired MOH, PHI மற்றும் ஏனைய ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் இன்றியமையாத காலத்தின் தேவை.
மேலும் சமூகத்தலைமைகள், கல்விமான்கள், சமயத்தலைமைகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சரியான திட்டமிடல், வெற்றிகரமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் மனிதவுயிர்களை கொறொனா வைரஸ் காவு கொள்வதைத் தடுப்போம்.
குறிப்பு: ஏனையவற்றை பின்னர் பதிவிடுகிறேன்
ஆக்கம்-
Dr.A.M.M.RIYAZ , MBBS, MSc, MD,PGDCC
MEDICAL SPECIALIST
Former MOH/Akkaraipattu, Ampara
Former Regional Epidemiologist
Former Health Secretary/ North-East Province
Reviewed by Editor
on
December 03, 2020
Rating: