
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் அக்கரைப்பற்றில் "அவசர அனர்த்த மீட்புக் குழு" ஒன்று இன்று (02) ஸ்தாபிக்கப்பட்டது
அக்கரைப்பற்று மாநகரம் இன்று எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் இயற்கை அனர்த்தம் ஒன்றையும் எதிர்பார்த்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மாநகர சபையின் ஊழியர்களைக் கொண்ட இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டது ஆறுதலாகவும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த செயற்பாட்டை மிகவும் துரிதமாக இயங்க வைப்பதற்கு உறுதுணையாக இருந்த மாநகர முதல்வர், அதன் பங்காளி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மேயர் தலைமையில் அக்கரைப்பற்றில் "அவசர அனர்த்த மீட்புக் குழு"
Reviewed by Editor
on
December 02, 2020
Rating:
Reviewed by Editor
on
December 02, 2020
Rating: