(ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்)
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பஸ் மற்றும் கனரக வாகன சாரதி அனுமதி பெறும் நபர்கள் ஒரு மாத காலப்பகுதிக்குள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என ஆராயப்படவுள்ளனர்.
ஜனவரி மாதம் 1ம் திகதி இந்த விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கனரக வாகனங்களின் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகள் போதைப் பொருளைப் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று பாரளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை!
Reviewed by Editor
on
December 10, 2020
Rating:
