அம்பாறை மாவட்டத்தில் முதலாவது குளிரூட்டப்பட்ட சமுர்த்தி காரியாலயம்!!!



(சர்ஜுன் லாபீர்)

உற்பத்தித் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும், உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகங்களில் முதன்முதலாக குளிரூட்டப்பட்ட கல்முனை சமுர்த்தி வங்கி சங்க காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலீஹ் தலைமையில் இன்று (14) திங்கட்கிழமை இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ்வின் அயராத முயற்சியால் மிக துரிதமாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான், சாய்ந்தமருது சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.எம் நஜீம்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாசீன் பாவா, நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதியுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது குளிரூட்டப்பட்ட சமுர்த்தி காரியாலயம்!!! அம்பாறை மாவட்டத்தில் முதலாவது குளிரூட்டப்பட்ட சமுர்த்தி காரியாலயம்!!! Reviewed by Editor on December 14, 2020 Rating: 5