(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இருவாரப் பயிற்சி நெறி இன்று (14) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று முதல் ஆரம்பமான பயிற்சிகள் அனைத்தும் பிரதேச செயலக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வானவர்களிற்கு முதலில் இரு வாரகால விளக்கப் பயிற்சியும் அதன் பின்பு 6 மாதகால செயல்முறை பயிற்சிகளும் தொழில் தகமை சான்றிதழுடன் வழங்கப்படவுள்ளது.
பயிற்சிக் காலத்தில் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் நபரொருவருக்கு 22 ஆயிரம் ரூபா மாதமொன்றுக்கு கொடுப்பணவாக வழங்கப்படும்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா அவர்கள் அம்பாரை தேசிய இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்ற இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
