பொரல்லை மயான கதவில் வெள்ளை துணி கட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்!!



(றிஸ்வான் சாலிஹூ)

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஸ்செய்யித் அலிஸாஹிர் மெளலானா.

குறிப்பாக எரிக்கப்பட்ட வெறும் 20நாட்களே ஆன பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரின் உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட பொரல்லை மயானக் கதவிலே ஒரு வெள்ளை துணியினை அவர் கட்டி தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.

ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக மயான கதவினில் அது தொங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பொரல்லை மயான கதவில் வெள்ளை துணி கட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்!! பொரல்லை மயான கதவில் வெள்ளை துணி கட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்!! Reviewed by Editor on December 12, 2020 Rating: 5