இலங்கையில் உள்ள சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்று

இலங்கைக்கு சுற்றுலா வந்த மூன்று உக்ரேனிய சுற்றுலா பயணிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து வந்த முதலாவது தொகுதி சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் சிகிச்சை வசதிகள் அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைனிலிருந்து 204 சுற்றுலாப் பயணிகளின் இரண்டாவது தொகுதி நேற்று (29) இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்று இலங்கையில் உள்ள சுற்றுலா பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்று Reviewed by Editor on December 30, 2020 Rating: 5